Asianet News TamilAsianet News Tamil

பத்து நாள் ஆகிடுச்சு.. ஆனாலும் மவுசு குறையல - உலக அளவில் "வாழை" பட வசூல் எவ்வளவு தெரியுமா?

Vaazhai Collection : பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் படம் தான் வாழை.

Mari Selvaraj vaazhai worldwide collection report ans
Author
First Published Sep 2, 2024, 4:25 PM IST | Last Updated Sep 2, 2024, 4:25 PM IST

திருநெல்வேலியில் சிறுவயது முதல் தான் செய்து வந்த, வாழைக்குலை சுமக்கும் பணியை மையமாகக் கொண்டு இரு சிறுவர்களின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இந்த கதை முற்றிலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பல முக்கிய சம்பவங்களின் கோர்வை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு ஆதரவாக நல்ல கதை உள்ள திரைப்படங்களை கொடுத்து வரும் வெகு சில இயக்குனர்களில் மாரி செல்வராஜும் ஒருவர். அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியான அவருடைய "வாழை" திரைப்படம் இப்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

விரைவில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து தனது ஐந்தாவது படைப்பான "பைசன்" என்கின்ற திரைப்படத்தை திரையில் வெளியிடவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், இன்னும் கொஞ்ச நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரே பல இடங்களில் உறுதிப்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் மாரி செல்வராஜ்.

அபிஷேக் பச்சனுக்கு முன்பே.. ஐஸ்வர்யா ராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததா; யாருடன் தெரியுமா?

"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான "கர்ணன்" என்கின்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார் மாரி செல்வராஜ். இந்த சூழலில் தான், இதுவரை வைகைப்புயல் வடிவேலுவை யாருமே பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, "மாமன்னன்" என்கின்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்து கோலிவுட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் அவர். 

இந்நிலையில் "வாழை" திரைப்படத்தை பார்த்த பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர் மற்றும் நடிகைகளும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கி மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 10 நாள்களை கடந்து வெற்றிகரமாக பயணித்து வரும் வாழை திரைப்படம், தற்பொழுது உலக அளவில் 28 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனையை படைத்து வருகிறது. விரைவில் அந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்ன ஒரு தாராள மனசு; ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்த படம் எது தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios