இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9 ஆம் தேதி) வெளியான 'கர்ணன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, ஒரு தரப்பினர் சில விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையிலும், மற்றொரு தரப்பினர் படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தன்னுடைய உரிமைக்காக போராடும், தனுஷின் கோவம், வேகம் படத்தையும் பரபரப்பாகியுள்ளது. அதே போல் லால், அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். மேலும் ரஜிஷா, கௌரி கிஷன், என படத்தில் தோன்றியுள்ள ஒவ்வொருவரும், தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 50 சதவீத, இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், வசூலில் கெத்து காட்டி வருகிறார் கர்ணன்.

இந்த படத்தை முடித்த கையேடு, அடுத்த படத்தில் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் மாரி செல்வராஜ். ஏற்கனவே மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இப்படம் தமிழகத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக துருவ் விரைவில் கபடி விளையாட்டு பயிற்சியில் ஈடுபட போவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றதன் பின்னணியில் தான் இந்த படத்தின் கதை இருப்பதாகவும், முதன்முதலாக மாரிசெல்வராஜ் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இதுவரை வெளியாகியுள்ள 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவடகாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.