மரண மாஸ்’ இது தான் இப்போதைய ட்ரெண்டிங் வார்த்தை. இது Youtube ட்ரெண்டிங் லிஸ்டில் மட்டும் நம்பர் 1 இடத்தில் இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ‘பேட்ட’

பேட்ட படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். முதன் முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.  இந்த குழு வெளியிட்ட ‘மரண மாஸ்’ பாடல் பக்கா குத்து பாடல். ரஜினியின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டுக்கும் திரை அரங்கில் விசில் பறக்கும், ரொம்ப நாட்களுக்கு பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட ரஜினி பாடல் அது.

ரஜினி – ஜெயலலிதா அரசியல் அனல் பறந்த காலத்தில், 1995ம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் “கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அதில் இருக்கு….” என்று எழுதப்பட்ட பாடல் மறக்கமுடியுமா? அதே பாணியில், இப்பொது ரஜினி அரசியலுக்கு வர இருக்கும் இந்த நேரத்தில், ‘மரண மாஸ்’ பாடலின் வரிகளை உற்று நோக்கினால் ரஜினியின் அரசியல் காற்று வீசும்.

விவேக் எழுதியிருக்கும் ரஜினியின் இந்த இன்ட்ரோ பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி.பி பாடியுள்ளனர். பாக்க தானே போற… இந்த காளியோட ஆட்டத்த…. என்று தொடங்கும் இந்த பாடல் ரஜினியின் அரசியல் ஆட்டம் இனி தான் ஆரம்பம் என்று குறிப்பதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் பாடல் வெளியாகி ஒரு வாரத்தில் இத்னை ஒன்றரைக் கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.