mansoor alikhan clean the lake

நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் வில்லத்தனம் காட்டினாலும், உண்மையில் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மக்களுக்கு நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழும், அம்மாப்பேட்டை ஏறி மற்றும் மூக்கன் ஏறி ஆகியவற்றை சுத்தம் செய்ய கடந்து இரண்டு தினங்களுக்கு முன்பு சேலம் சென்றார். 

அங்கு மார்பளவுதண்ணீரில் இறங்கி, ஏரிகளில் பராமரிப்பு இன்றி தண்ணீரை வீணாக்கி வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினார். மேலும் இவருடன் பொதுமக்களும் ஏரியில் இறங்கி வேலை செய்தனர்.

உடைநிலை சரி இல்லாதா நிலையிலும், தண்ணீரில் இறங்கி வேலைகள் செய்ததோடு... ஏரியை முழுவதும் சுத்தம் செய்ய 1 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்து சென்றுள்ளார் மன்சூர் அலிகான்.

இந்த ஏரியை பார்வையிட கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் கார்த்தி மற்றும் சிம்பு வந்து சென்றனர். ஆனால் இவர்கள் எந்த வேலையோ ஏரியை பராமரிக்க எந்த உதவியும் செய்யாத நிலையில், இவர் செய்துள்ள இந்த உதவிக்கு அந்த பகுதி மக்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்கள் பலர் இவரை வாழ்த்தி வருகின்றனர்.