வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை  பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறியுள்ளது.

குறிப்பாக கே.கே.நகர், அரும்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவு தண்ணீர் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டும் இன்றி நடந்து செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில் தமிழ் நடிகர் மன்சூர்அலிகான் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து நடுரோட்டில் படகோட்டி கொண்டே பாட்டு பாடி செல்லும் காட்சியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ’உயிரே உயிரே’ என்ற பாடலின் மெட்டில் ’புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடிவிடு’ என்று பாடிக்கொண்டே நிவர் புயலை ஓட செய்துள்ளார்.  

அந்த காட்சிகள் இதோ