manmohan sing life history make movie

பாலிவுட் திரையுலகில் பெரும்பாலும் பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பதில் இயக்குனர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட காந்தி அடிகள், அம்பேத்கர், இந்திராகாந்தி, பகத்சிங், தெண்டுல்கர், டோனி, மேரி கோம் உள்ளிட்ட படங்கள் வசூலிலும் சாதனை படைத்தது.

தற்போது அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாற்றை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார் . இந்தப் படத்துக்கு ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளனர். மன்மோகன்சிங் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிடும் வகையில் இந்தத் தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கிறார். மேலும் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்னராகவும், உலக வங்கியில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தது பின் இவர் நிதி அமைச்சர் ஆனது மற்றும் இவரை சோனியா காந்தி பிரதமர் ஆக்கியது முதல் இவர் தொடர்ந்து 10 வருடங்கள் பிரதமராக நாட்டை ஆண்டது வரை படமாக்கப்பட உள்ளது.

மேலும் இவருடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், மற்றும் இயற்கை சீற்றங்களையும் மையப்படுத்தி படமாக்க உள்ளனர் படக்குழுவினர்.