மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மஞ்சு வாரியார், தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான " ஹொவ் ஓல்ட் ஆர் யூ" படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட "36 வயதினிலே" படத்தில் தான் நடிகை ஜோதிகா,  ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்க உள்ள, "அசுரன்" படத்தின் மூலம் தமிழில் மஞ்சு வாரியார் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. 

இதை தொடர்ந்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் முதல் முறையாக, "அசுரன்" படத்தில் நடிக்க உள்ளது பற்றி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் 'முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்க போகிறேன், இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கு நன்றி எனவும் படத்தில் நடிக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்'.