இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். 

இவரின் முதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. எனவே அடுத்த அடுத்த தமிழ் படங்களில் இவரை மும்புரமாக கமிட் செய்தனர் இயக்குனர்.

ஆனால் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியான, 'சத்ரியன்' மற்றும் 'இப்படை வெல்லும்' ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால். தற்போது இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இதனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைக்காததால், வெக்ஸ் ஆகி தன்னுடைய வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு ஒரு நாள் முழுவது அழுதாராம். பின் நடிகை த்ரிஷா தான் இவரை சமாதானப்படுத்தினாராம் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.