manjima mohan said sorry why?

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகம் கொடுத்த நடிகை மஞ்சிமா மோகனுக்கு பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறது.

தற்போது இவர் இயக்குனர் கவுரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படை வெல்லும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படை வெல்லும் படத்தின் ப்ரோமோஷனுக்கு நடிகை மஞ்சிமா மோகன் பங்கேற்கவில்லை. அதற்காக மஞ்சிமா தற்போது அனைத்து பத்திரிகையாளர்கள், மற்றும் ஊடகங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் நான் 'குயின்' படத்தின் ரீமேக் படப்பிடிப்புக்காக பிரான்சில் இருப்பதால் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் சினிமா பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். படத்தை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள். கள்ளத்தனமாக பார்க்காதீர்கள் என வேண்டுகோளையும் விடுத்துள்ளார் மஞ்சிமா.