Asianet News TamilAsianet News Tamil

திருமணத்திற்கு பின் குப்பை கதையில் 'மனிஷா யாதவ்'...! கண்கலங்கிய நடன இயக்குனர்...!

manisha yadav after marriage acting in kuppaikkathai movie
manisha yadav after marriage acting in kuppaikkathai movie
Author
First Published May 17, 2018, 12:35 PM IST


பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பைக் கதை'.  இந்த படைத்தில் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்துக்கொண்ட நடிகை மனிஷா யாதவ் ,கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை, அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். manisha yadav after marriage acting in kuppaikkathai movie

தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்..

மே-25ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. 
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  manisha yadav after marriage acting in kuppaikkathai movie

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடன இயக்குனர் தினேஷ் கூறியபோது...“இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க..

என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்..manisha yadav after marriage acting in kuppaikkathai movie

கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன். என் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத நாள்.

ஆர்யா, கார்த்தியெல்லாம் கூப்பிட்ட அடுத்த நொடி எப்போ மாஸ்டர் வரணும்னு கேட்டு எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருக்காங்க. யாரும் இல்லை சினிமாவுலன்னு நினைச்சேன். ஆனால் இந்த நிகழ்வு நாங்க இருக்கோம்ணு ஹீரோக்களும், இயக்குநர்களும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள் எனக் கண்கலங்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios