புற்றுநோய் வந்துவிட்டால் நம்பிக்கையுடன் எதிர்த்து போராடுங்கள் என நடிகை தெரிவித்துள்ளார்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கியவா் மணிஷா கொய்ராலா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா், திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து வந்தார்.

 பல ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி வந்த மணிஷா கொய்ராலா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 

இதனிடையே, மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மணிஷா கொய்ராலா, புற்று நோயை வெல்ல எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்த்து விட்டு நம்பிக்கையுடன் நோயுடன் போராடுங்கள் என தெரிவித்தார்.

புற்று நோய் ஒன்றும் தீர்க்க முடியாத நோய் இல்லை என்றும், மருந்துகளுடன் நம்பிக்கை இருந்தால் புற்று நோயை எளிதில் வெல்லாம் என்றும் மணிஷா கொய்ராலா தெரிவித்தார்.