Asianet News TamilAsianet News Tamil

Maniratnam : பிறமொழி படங்களின் வெற்றியைக் கண்டு தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை - இயக்குனர் மணிரத்னம்

Maniratnam : தமிழ் சினிமாவில் உள்ள பல இளம் திறமையாளர்கள் புதிய கதவுகளை திறந்துள்ளனர் என இயக்குனர் மணிரத்னம் கூறி உள்ளார்.

Maniratnam says about Pan Indian movie dominance in kollywood
Author
Tamil Nadu, First Published Apr 26, 2022, 11:07 AM IST

2022-ம் ஆண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிய உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு வெளியான ஒரு படம் கூட பிளாக்பஸ்டர் வெற்றியை ருசிக்காதது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினருக்கே பேரதிர்ச்சியாக உள்ளது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகியும் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.

இருந்தாலும் சினிமா ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்தது பான் இந்தியா படங்கள் தான். கடந்த 5 மாதங்களில் தமிழ் படங்கள் சோபிக்க தவறினாலும், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் மற்றும் கே.ஜி.எஃப் 2 போன்ற பான் இந்தியா படங்கள் தமிழ்நாட்டில் சக்கைபோடு போட்டு வருகின்றன. பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் வாரிக் குவிக்கின்றன.

Maniratnam says about Pan Indian movie dominance in kollywood

பான் இந்தியா படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் தமிழ் படங்களுக்கு மவுசு குறைந்துவிடுமோ என்கிற அச்சமும் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல இயக்குனர் மணிரத்னம், பான் இந்தியா படங்களின் ஆதிக்கம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : “பிறமொழி படங்களின் வெற்றியைக் கண்டு தமிழ் சினிமா கவலைப் பட தேவையில்லை. தமிழ் சினிமாவில் உள்ள பல இளம் திறமையாளர்கள் புதிய கதவுகளை திறந்துள்ளனர்” என அவர் கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Isha koppikar : பிரபல நடிகருடன் அட்ஜஸ்மெண்ட் செய்ய சொன்னாங்க... அயலான் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு

Follow Us:
Download App:
  • android
  • ios