Asianet News TamilAsianet News Tamil

'மாநாடு' படப்பிடிப்பு முடிந்த கையேடு பரபரப்பாக நடக்கும் அடுத்த கட்ட வேலை! லேட்டஸ்ட் அப்டேட்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட பணியை படக்குழுவினர் சிறப்பாக துவங்கியுள்ளனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 

manadu movie dubbing work started
Author
Chennai, First Published May 6, 2021, 6:54 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட பணியை படக்குழுவினர் சிறப்பாக துவங்கியுள்ளனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

manadu movie dubbing work started

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைய நிலையில், அடுத்தகட்ட வேலைகளை அமோகமாக பூஜையோடு துவங்கியுள்ளனர் படக்குழுவினர்.

manadu movie dubbing work started

படப்பிடிப்பு முடிந்த கையேடு, இன்று இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக பூஜையுடன் துவங்கியுள்ளது. முடிந்த வரை கூடிய விரைவில் படத்தை முடிந்து வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'மாநாடு' படத்தின், புரோமோஷன் பணிகளை இப்போதே துவங்கி விட்டார். 

manadu movie dubbing work started

‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை ரம்ஜான் தினமான மே 14ம் தேதி  வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சிம்பு மற்றும் யுவனின் ரசிகர்களால் மாபெரும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் வெளியானதையே... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள் பாடலையும் செம்ம ட்ரெண்டாக்கி தெறிக்க விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios