பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்து, கல்லூரி படிப்பை முடித்த பின் அங்கேயே வேலைக்கு சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகை மமதி சாரி. பின் சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ளார். ரசிகர்களின் வெறுப்பை எதையும் சந்திக்காமல், மிகவும் பொறுமையாக அனைத்தும் கையாளுவதால் வேறு வழி இன்றி இந்த நிகழ்சியயை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்... பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அனுபவங்கள், மட்டும் தன்னுடைய திரையுலக பயணம் குறித்து மட்டுமே ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட மமதி தற்போது தன்னுடைய குடும்ப பிரச்சனை மற்றும் விவாகரத்து குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

வாழ்க்கை பிரச்சனை?

தன்னுடைய கணவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். அவரின் முன்னாள் மனைவியையை தனக்கு ஏற்கனவே நான்றாக தெரியும் என்பதால் அவரின் சம்மதத்தைப் பெற்று காதலை ஏற்றேன்.

எங்கள் உறவு அன்பால் அடர்த்தியானது. ஆறு வருடங்கள் 'லிவிங் டூ கெதர்' வாழ்க்கை, பிறகு சட்டப்படி ஆறு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். 

ஒருவர் பாதைக்கு ஒருவர் மாற முடியாத தருணத்தை சந்தித்தோம். அது என் வாழ்வின் மிகச் சிக்கலான காலகட்டம். 2014 விவாகரத்து பெற்றோம். ஒரு பெண்ணை பெண்ணால் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாதா என்ன? நிச்சயம் வாழ முடியும் என்கிற நம்பிக்கையோடு தற்போது வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.