malysian government give the job for rajinikanth

தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ரஜினியை கடந்த இருபது வருடங்களாக பல அரசியல் கட்சிகள் இழுக்க முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அதுவும் கடந்த சில தேர்தலில் ஆதரவு குறித்தும் ரஜினி எதுவும் தெரிவிக்கவில்லை

இந்நிலையில் மலேசிய அரசு ரஜினிக்கு ஒரு முக்கிய பதவியை அளிக்க முன்வந்துள்ளதாம். அதுதான் சுற்றுலா துறை தூதர் பதவி.

இந்த பதவியில் தற்போது இருந்து வரும் ஷாருக்கான் மலேசியாவுக்கு சுற்றுலா பயணிகளை இழுக்க செய்த முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதால் அவரை மாற்றும் முடிவில் இருக்கின்றதாம் அந்நாட்டு அரசு.

கடந்த ஆண்டு ரஜினி நடித்த 'கபாலி' திரைப்படம் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தபோது அந்நாட்டு மக்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனார் ரஜினி. 

எனவே மலேசிய அரசு இந்த பதவியை அளிக்க முன்வந்தால் ரஜினி தட்டமாட்டார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்