பாலியல் வழக்கில் பிரபல இயக்குநர் கைது... அதிர்ச்சியில் திரையுலகம்!!
நிவின் பாலி நடித்த படவேட்டு படத்தின் இயக்குநரை காவல்துறையினர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று கைது செய்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிவின் பாலி நடித்த படவேட்டு படத்தின் இயக்குநரை காவல்துறையினர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று கைது செய்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மலையாள நடிகர்களும் கால்பதித்து பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் துள்கர் சல்மான், நிவின்பாலி உள்ளிட்ட பல மலையாள நடிகர் தமிழ் படங்களிலும் நடித்ததோடு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நிவின் பாலி படவேட்டு என்ற திரைப்படத்தில் நடத்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், அதிதி பாலன், நிவின் பாலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படவேட்டு படம் இந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்னி வேனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் லிஜு தான் கதை எழுதி அவரே இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த படக்குழுவை சேர்ந்த ஒரு பெண், பட ஷுட்டிங்கின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இயக்குநர் லிஜு மீது கடக்கநாடு இன்ஃபோபார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது பற்றி போலீசார் தரப்பில் கூறுகையில், லிஜு கிருஷ்ணா மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி புகார் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது. ஆனால் அந்த பெண் திரைத்துறையை சேர்ந்தவர் அல்ல. அதே சமயம் படக்குழுவில் ஒருவருக்கு அவர் நன்கு பழக்கமானவர் என தெரிவித்துள்ளனர்.
லிஜு தற்போது, தனது அடுத்த படத்தின் ஷுட்டிங் நடக்கும் கன்னூர் பகுதியில் இருந்து வந்தார். அவரை ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். டைரக்டர் லிஜு மட்டுமல்ல கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞரான சுஜீஸ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெண் வாடிக்கையாளர்கள் 6 பேர் பாலியல் புகார் அளித்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக தனது வழக்கறிஞரை பார்க்க அவரின் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.