'பிகில்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பு.. பரபரப்பு... குறையாமல் உருவாகி வருகிறது '64 ஆவது'  திரைப்படம்.   

'பிகில்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பு.. பரபரப்பு... குறையாமல் உருவாகி வருகிறது '64 ஆவது' திரைப்படம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் டெல்லியில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கர்நாடகா செல்கின்றனர். 

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய நடிகரான ஆண்டனி வர்கீஸ் அதிரடியாக இப்படத்திலிருந்து விலகி உள்ளார். கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக இப்போது 'கைதி' படத்தில் வில்லனாக கலக்கிய அர்ஜுன் தாஸ் கமிட்டாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.