”குழந்தைகள் மிக வேகமாக வளர்ந்துவிட்டார்கள். எனவே மீண்டும் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பதால் தொடர்ச்சியாக கதை கேட்டு வருகிறேன்” என்கிறார் ‘நடிப்புதான் எனக்குப் பிடிச்ச தொழிலு’ என்று சொல்லாமல் சொல்லும் மாளவிகா. 

”குழந்தைகள் மிக வேகமாக வளர்ந்துவிட்டார்கள். எனவே மீண்டும் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பதால் தொடர்ச்சியாக கதை கேட்டு வருகிறேன்” என்கிறார் ‘நடிப்புதான் எனக்குப் பிடிச்ச தொழிலு’ என்று சொல்லாமல் சொல்லும் மாளவிகா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

99’ல் அஜித்துடன் 'உன்னைத்தேடி’ படத்தில் அறிமுகமாகி சுமார் பத்து ஆண்டுகள் வரை பிசியாக இருந்தவர் மாளவிகா.’வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்...’,’கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு’ பாடல்களில் நடனம் ஆடி மிகவும் பிரபலமானார். ’ரோஜா வனம்’, ’வெற்றி கொடி கட்டு’, ’சந்திரமுகி’, ’திருட்டு பயலே’, ’குருவி’, ’வியாபாரி’, ’சபரி’ உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். தற்போது குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

tஹனது ரீ எண்ட்ரி குறித்துப் பேட்டி அளித்த அவர் “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். ’வாளமீன்’ பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பை சிறப்பாக முடித்துவிட்டேன். மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.”என்கிறார்.