தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் நேற்று முதல் தான் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக ட்வீட் போட்டார். தற்போது ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷூட்டிங்கிற்கு தயாராவது போல் உள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து ஹீரோயின் போட்ட போட்டோ... தளபதி 64 லேட்டஸ்ட் அப்டேட்...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தீபாவளி விருந்ததாக அட்லீ - விஜய் கூட்டணியில் வெளி வந்த 'பிகில்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'தளபதி 64' ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி களம் இறங்குகிறார். மேலும் சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சம்மர் விருந்தாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், டெல்லியில் இரண்டாம் கட்ட படிப்பு நடைபெற்று வருகிறது. கடும் காற்று மாசால் டெல்லி பாதிக்கப்பட்டுள்ள போதும், படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் நேற்று முதல் தான் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக ட்வீட் போட்டார். தற்போது ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷூட்டிங்கிற்கு தயாராவது போல் உள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக டெல்லி சென்றுள்ள படக்குழு கடும் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்பதால், படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹீரோயின் மாளவிகா மோகனன், ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து கொடுக்கும் தகவல்கள் விஜய் ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது.