நடிகை மாளவிகா மோகனன், கேரள முதலமைச்சர் பினராய் விஜயனிடம் எழுப்பியுள்ள கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

நடிகை மாளவிகா மோகனன், கேரள முதலமைச்சர் பினராய் விஜயனிடம் எழுப்பியுள்ள கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் நடிகை என்பதை தாண்டி, சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்ட்டிவாக இருப்பவர். சமூக கருத்து கொண்ட பதிவுகளையும் ட்விட்டரில் போட்டு வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் சுகாதார துறை அமைச்சராக பணியாற்றி வந்த... சைலஜா நீக்க பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய மனதில் இருந்த கேள்வியை ட்விட்டர் மூலம் முன்வைத்துள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மீண்டும் முதல்வராக பினராய் விஜயன் மே 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். சுமார் 500 பேருக்கு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கவேண்டிய அரசு, கும்பல் கூடும் படியான செயல்களில் ஈடுபட கூடாது என நடிகை பார்வதி போன்ற பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மற்றொரு விஷயத்திற்காக 'மாஸ்டர்' நாயகி, மாளவிகா மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். "அதாவது கொரோனா முதல் அலை கேரளாவில் அதிக அளவில் பரவியபோது, தன்னுடைய துரிதமான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தவர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜா. எனவே இவருக்கு கேரள மக்களிடம் மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது.

ஆனால் புதிய அமைச்சரவையில், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் சைலஜா நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நடிகை மாளவிகா மோகனன் ட்விட்டர் பக்கத்தில் "எங்களுக்கு கிடைத்த மிக சிறந்த சுகாதார துறை அமைச்சர்களில் ஒருவர் சைலஜா". அவரை நீக்கி விட்டீர்களா... அங்கு என்னதான் நடக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Scroll to load tweet…