maina husband suicide

தனியார் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் நந்தினி‘ அவரது கணவர் கார்த்திகேயன். சென்னை திநகரில் ஜிம் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவி இறந்து விட்டதால் இரண்டாவதாக நந்தினியை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த கார்த்கேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார்த்திகேயன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது, அதில் நந்தினியும் அவரது தந்தை ராஜேந்திரனும் தன்னை டார்சர் செய்வதாகவும் அவர்களின் டார்சரால் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாவும் எழுதிஉள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகை நந்தினி மற்றும் அவரது தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.