Asianet News TamilAsianet News Tamil

சிம்பு நடிக்க கூடாது! பட அதிபர் பரபரப்பு புகார்!

நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இவர் இந்த படத்திற்கு முன், நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை, மிருதன் ஆகிய படங்களை தயாரித்து பிரபலமானவர்.

maicle royappan complint againt simbu
Author
Chennai, First Published Sep 19, 2018, 5:14 PM IST

நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இவர் இந்த படத்திற்கு முன், நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை, மிருதன் ஆகிய படங்களை தயாரித்து பிரபலமானவர்.

சிறு பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரித்து வந்த இவர் சிம்புவை வைத்து, 'AAA ' படத்தை அதிக முதலீட்டில் எடுத்தார். ஆனால் சிம்பு படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால் தனக்கு  20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

maicle royappan complint againt simbu

மேலும் சிம்பு இந்த படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து விட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்தார் என்றும் மற்ற காட்சிகள் டூப் நடிகரை வைத்து படமாக்கினோம் என்று தெரிவித்தார்.

ஒருவழியாக படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்கனாக வெளியிடலாம் என்றார். ஆனால் இரண்டாம் பாகம் அவர் நடித்து கொடுக்க வில்லை. படப்பிடிப்பிற்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்காததால் தனக்கு ஏற்பட்ட 20 கோடி நஷ்டத்தை  சிம்பு தான் ஏற்க வேண்டும் என ஏற்கனவே மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

maicle royappan complint againt simbu

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தியது.ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் சமரச தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கம் படத்தில் சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது  சுந்தர் சி இயக்கும் படத்தில் நடக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடர்ந்த இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து கொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios