Asianet News TamilAsianet News Tamil

சிறப்பாக செய்து முடித்த விஜய்... முதல் ஆளாக வந்து நன்றி கூறிய மகேஷ்பாபு!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்தநாள் அன்று, விஜய்க்கு விடுத்த கிரீன் இந்தியா சேலஞ்சை, தளபதி விஜய் இன்று, சிறப்பாக செய்து முடித்து, அதன் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் விஜய்க்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
 

mahesh babu replay for thalabathi vijay
Author
Chennai, First Published Aug 11, 2020, 7:39 PM IST

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்தநாள் அன்று, விஜய்க்கு விடுத்த கிரீன் இந்தியா சேலஞ்சை, தளபதி விஜய் இன்று, சிறப்பாக செய்து முடித்து, அதன் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் விஜய்க்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

mahesh babu replay for thalabathi vijay

தெலுங்கு திரையுலகை சேர்ந்த, சமந்தா, ராஷ்மிக்கா மந்தனா, உள்ளிட்ட பல பிரபலங்கள் மாறி மாறி இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை செய்து முடித்து, தங்களுக்கு பிடித்த மூன்று பிரபலங்களுக்கு இந்த சவாலை விடுத்தது வித்தனர். மரம் நடுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்பதால், இந்த சவாலை பல பிரபலங்கள் மனநிறையோடும், மகிழ்ச்சியோடும் செய்து முடித்தனர்.

mahesh babu replay for thalabathi vijay

அந்த வகையில் தான், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்தநாளான ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று, மர கன்று ஒன்றை நட்டு, இந்த சவாலை  ஜூனியர் என்.டி.ஆர், தளபதி விஜய், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாக கூறியுள்ளார்.

mahesh babu replay for thalabathi vijay

இவர் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான, விஜய்க்கு இந்த சவாலை விட்டதால், இவர் இதனை ஏற்று செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று, அதனை சிறப்பாக செய்து முடித்து, தன்னுடைய வீட்டு கார்டன் ஏரியாவில் மரம் நடும் புகைப்படத்தை தளபதி விஜய் சற்று முன்னர் வெளியிட்டிருந்தார்.

மேலும் இது மகேஷ் பாபுவிற்காக தான், கிரீன் இந்தியா தான் சிறந்த வலிமை, நன்றி எனவும் தெரிவித்துள்ளார். தளபதியின் இந்த செயலை பார்த்து, அவருக்கு நன்றி தெரிவித்து மகேஷ் பாபு, பதிலளித்துள்ளார். இந்த சவாலை ஏற்று செய்தற்கு நன்றி சகோதரரே என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios