Asianet News TamilAsianet News Tamil

சிவாஜிக்கு பின் கர்ணனாக நடிக்க இருந்த விக்ரம்! படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்!

1964 ம் ஆண்டு வெளிவந்த 'கர்ணன்' திரைப்படம் மீண்டும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்தது. 56 வருடங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த படம் கர்ணன்.  இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணன் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. 
 

mahaveer karnan movie drooped?
Author
Chennai, First Published Jul 19, 2020, 8:09 PM IST

1964 ம் ஆண்டு வெளிவந்த 'கர்ணன்' திரைப்படம் மீண்டும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்தது. 56 வருடங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த படம் கர்ணன்.  இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணன் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. 

இந்நிலையில் மீண்டும் 'மஹாவீர் கர்ணா' என்ற பெயரில் 350 கோடி ரூபாய் மதிப்பில் இப்படம் உருவாகிறது. இதை நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் இப்படத்தை  தயாரிக்கிறது. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற என்னு நிண்டே மொய்தீன் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் கர்ணனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், துரியோதனன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 

mahaveer karnan movie drooped?

ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி, இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும், விக்ரம் அடுத்தடுத்து மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதால் இந்த படம் கைவிடபப்ட்டதாக சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து, விளக்கம் அளித்துள்ள படக்குழு, விக்ரம் தற்போது கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த படம் ட்ரோப் ஆனதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios