பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக, சண்டை சச்சரவு என கலகலப்பாக போகிறது. எனினும் பிக்பாஸ் முதல் சீசனுக்கு இருந்த வரவேற்ப்பு தற்போது இல்லை என்பது தான் உண்மை.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் இரண்டு நாட்களும் நல்ல டிஆர்பி-யை பெற்று வருகிறது. இதனை இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் அதிரடியாக கூறியுள்ளார் கமல்.

அதே போல் கடந்த சில வாரங்களாக மஹத் திடீரென கூச்சல் போடுவது, டென்சனாகி கத்துவது, டாஸ் என்றால் போட்டியாளர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வாரம் மும்தாஜ் மிகவும் அமைதியாக இருந்த போதும், அத்துமீறி அவரை கேலி செய்தது போன்ற செயல்களால் மஹதின் மேல் இருந்த இமேஜ் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் டேமேஜ் ஆகியுள்ளது. 

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் கமல்ஹாசன்... ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் மஹத் ஆகிய மூன்று பேரிடமும் எந்த கேள்விகளையும் கேட்பதில்லை என குற்றம்சாட்டியதை தொடர்ந்து இன்று அனைவரையும் தாளித்து விட வேண்டும் என பிக்பாஸ் களத்தில் இறங்கியுள்ளார்.

அதுகுறித்த ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல் பிக்பாஸ் முதல் சீசனில் வந்த ஆவரேஜ் IQ வை விட மிகவும் குறைவாக உள்ளது பிக்பாஸ் சீசன் 2-ல் என கோவமாக கூறுகிறார். 

மும்தாஜ் மற்றும் மஹத் இருவரையும் காட்டி, இவர்கள் இருவரில் யார் நல்ல விதமாக நடந்து கொள்ளவில்லை என, ரசிகர்களிடமே கேட்கிறார். இதற்க்கு ரசிகர்கள் அனைவரும் மகத் பெயரை கூறுகிறார்கள். பின் மஹத்தை பார்த்து ஒண்ணுமே நடக்காதது போல் சிரித்து கொண்டு இருக்கிறீர்களே என கேட்கிறார். 

இதற்கு மஹத் நான் என்ன சார், சொல்வது என கமலிடம் கேட்க... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நாங்க சொல்லட்டுமா என கூறி ஒரு குறும்படம் போட்டு காட்ட போவதாக கூறுகிறார்.  இதன் மூலம் இன்று மஹத், மும்தாஜிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டது, அவரை அவமதிப்பது போன்று நடந்து கொண்டது பற்றிய ஒரு குறும்படம் போட்டு காட்டுவார் என எதிர்ப்பார்க்கலாம்.