பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன்2ல் அதிகம் புறம் பேசுபவர் யார்? என்று கேட்டால் ஒரு பெரிய லிஸ்டே போட்டு விடலாம். அந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த வைஷ்ணவியை தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கின்றனர் மக்கள். வைஷ்ணவி போனாலும் அவர் பற்ற வைத்த நெருப்பு அப்படியே தானெ இருக்கும். 

அது போக பிக் பாஸ் வீட்டில் தான் இன்னும் நிறைய வைஷ்ணவிகள் மாறு வேஷத்தில் சுற்றி கொண்டிருக்கின்றனரே. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் புறம் பேசுதல் இனியும் நன்றாக தொடரத்தான் போகிறது. சரி இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய பிரமோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. 

இந்த பிரமோவில் மஹத் மும்தாஜ் குறித்து மிக தரக்குறைவாக புறம் பேசி இருக்கிறார். இரவு பெரும்பாலும் பெண்கள் அறையிலேயே தங்கி இருக்கும் மஹத் அங்கே தான் புறம் பேசிக்கொண்டிருக்கையில் மும்தாஜை குறித்து பேசுகையில் இந்த பொம்பள ரொம்ப தப்பானவ எனக்கு அப்பவே தெரியும்.

நான் யார் கூடயாவது சண்டை போட்டா நேரடியா போய் மன்னிப்பு கேட்பேன். இப்படி முதுக்கு பின்னால் புறம் பேச மாட்டேன் என்பது போல பேசி இருக்கிறார். இந்த பிரமோவில் மும்தாஜ் தனியாக வீட்டின் வெளியே சோகமே உருவாக ஏதோ சிந்தித்து கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றனர்.
மும்தாஜ் இல்லாத போது அவரை பற்றி இவ்வாறு பேசுவது புறம் பேசும் வகையில் சேராது போல. அவ்வளவு வெளிப்படையான நபர் என்றால் மஹத் இதை கூட மும்தாஜ் முன்னிலையில் நேரடியாகவே கூறி இருக்கலாம்