பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் எலிமினேட் ஆகும் போது வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து சுவாரஸ்யமும் குறைய தொடங்கும். அது போன்ற தருணங்களில் சுவாரஸ்யதிற்காக வைல்ட் கார்ட் என்ட்ரியாக சில பிரபலங்களை உள்ளே அனுப்பி வைப்பார் பிக் பாஸ். 

இம்முறையும் அது தான் நடந்திருக்கிறது பிக் பாஸ் வீட்டில் . அப்படி புதிதாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருப்பவர் வேறு யாருமல்ல சென்னை 600028 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த விஜயலஷ்மி தான்.


மிகவும் ஆர்ப்பாட்டமாகவும் வேகமாகவும் பிக் பாஸ் வீட்டினுள் ஓடோடி வந்திருக்கிறார் விஜயலஷ்மி. இதே வேகத்தில் இங்கிருந்து ஓடாமல் இருந்தால் சரிதான். இரவு நேரத்தில் தான் அவர் வீட்டினுள் வந்திருப்பார் போல. உறங்கி கொண்டிருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஓடோடி வந்து அவரை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் இந்த பிரமோவில். 

அதிலும் ஆண்கள் அணி தான் பதறி அடித்து கொண்டு ஓடி வருகிறது. இதில் விஜயலஷ்மியை கண்டவுடன் பாலாஜி முகம் மலர அவரின் அருகில் செல்கிறார். ஆனால் குறுக்கே மஹத் வந்து விஜயலஷ்மியை கட்டி பிடித்து வரவேற்கிறார். இதனால் பாலாஜியின் முகம் கோபமாகி விடுகிறது. ஏற்கனவே வெளியில் ஒரு காதலி , பிக் பாஸ் வீட்டில் யாஷிகா என வாழ்ந்துவரும் மகத் மேல் கடுப்பில் இருக்கும் பாலாஜி, இன்னும் எத்தனை பொண்ணுங்கள தான் இவன் கிட்ட இருந்து காப்பாத்த போறேனோ? என்பது போல இந்த காட்சியை பார்ப்பது கொஞ்சம் காமெடியாக தான் இருக்கிறது.

ஏற்கனவே பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் நடித்து வந்த விஜயலஷ்மி, அங்கு தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என கூறி சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்காக தான் அப்படி செய்திருப்பார் போல. எது எப்படியோ இனியாவது பிக் பாஸ் வீடு கலவரமாகமல் இருந்தால் சரி.