பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகமாகும் என எதிர்ப்பார்த்தால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்ய வில்லை என கூறலாம். இதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் யாரும் அவர்களுடைய உண்மை முகத்தை காட்டாமல் நடித்து வருவது தான் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மஹத்துக்கும், பாலாஜிக்கும் பிரச்சனை வெடிக்கிறது.

இதில்... 'கத்தி பேசக்கூடாது என்பது ரூல் என மஹத் கூறுகிறார். பின் பாலாஜி இவரை பிச்சை எடுத்து சாப்பிடு என்று கூறியது போல் தெரிகிறது, அதனால் மஹத் 'நீ யாரு என்னை பிச்சை எடுத்து சாப்பிட சொல்ல என கோவமாக பாலாஜியிடம் கேட்கிறார். 

இதை தொடர்ந்து பாலாஜி உன்னை சொன்னனா... என மஹத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். இதற்கு பின் 'ஹேய் ஜோக்கரு, காமெடி தலையா' என பாலாஜியின் வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசுகிறார்.

 

இந்த வாக்குவாதம் சமரசம் ஆகும் நேரத்தில் பாலாஜி எதோ பேச, மீண்டும் மஹத், பாலாஜியிடம் சீறிக் கொண்டு சண்டைக்கு போவது போல் இந்த ப்ரோமோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.