காதலில் பல வகை இருக்கிறது. முக்கோண காதல், ஒரு தலை காதல், நல்ல காதல், கள்ள காதல். இதில் புதிதாக மருத்துவ காதல் எனும் வகையை அறிமுகப்படுத்திய பெருமை பிக் பாஸையே சேரும். சரி இத்தோடு முடிந்தது என்று பார்த்தால் பிக் பாஸில் புதிதாக இன்னொரு வகை இந்த சீசன் 2ல் உருவகிவிடும் போல இருக்கிறது.

யாஷிகா மற்றும் மஹத் இந்த இருவருமே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் அத்து மீறி தான் செயல்பட்டு வருகிறார்கள். இதனை பலமுறை பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சித்திருக்கின்றனர். ஆனால் இருவரும் இன்னும் திருந்தியதாக தெரியவில்லை. இதில் மஹத்துக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மஹத்துக்கு உடை அனுப்பி வைப்பது போன்ற பல உதவிகளை வெளியில் செய்துவருவது அவர் தான். அதே சமயம் பிக் பாஸ் வீட்டினுள் மஹத் யாஷிகாவை காதலிப்பது போலவே நடந்து கொள்கிறார். இதில் இருவருக்குமே மற்றவின் நிலை என்ன என்பது நன்றாக தெரியும்.

இது குறித்து பலமுறை மஹத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போதும் மஹத் யஷிகாவை தான் காதலிக்கவில்லை என கூறி தப்பி இருக்கிறார். ஆனால் இந்த முறை யாஷிகா அவரை குற்றவாளி கூண்டில் வைத்து கேள்வி கேட்ட போது ஆம் நான் யாஷிகாவை காதலிக்கிறேன் அப்படி ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது என ஒப்பு கொண்டிருக்கிறார்.

இது யாஷிகாவிற்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால் பாலாஜியை கடுப்பாக்கி இருக்கிறது. மஹத் செய்யும் இந்த செயல் சரியா என்பது போல கேள்வி எழுப்பி இருக்கிறார் பாலாஜி. அதை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் மஹத். விறுவிறுப்பாக வெளியாகி இருக்கும் இந்த பிரமோவினால் இந்த வாரம் பிக் பாஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.இதனிடையே இந்த காதலுக்கு என்ன பேர் வைக்க போராங்களோ தெரியலையே என கலவரப்பட்டு போய் இருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.