பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான சுவாரிஸ்யத்தை ஏற்ற, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் தேவையில்லாத பல பிரச்சனைகள் உருவாக்கப் படுகிறதோ... என ரசிகர்களுக்கே சந்தேகம் எழுந்துள்ளதாக பலர் கூறி வருகிறார்கள். 

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் மஹத் அணியின் கேப்டனாக இருக்கும் மும்தாஜிடம் பிடிக்காத, 5 விஷயங்களை கூறுமாறு நடிகர் பொன்னம்பலம் கூறுகிறார்.

இதற்கு மஹத், தலைவியாக இருந்தால் பணிவாக இருக்க வேண்டும், கொஞ்சம் அன்போடு இருக்கணும், அது சுத்தமாக அவரிடம் இல்லை என கூறுகிறார். பின் மும்தாஜ் பேசும் காட்சி காட்டப்படுகிறது. இதில் மஹத் சாப்பிட்டும் போது, டீம் கூட விவாதிக்காமல் ஏன், டாஸ்க் கொடுத்தீர்கள் மஹத் என கேள்வி எழுப்புகிறார் மும்தாஜ்.

இவரின் கேள்விக்கு பதில் கொடுக்கும் மஹத், என்னை மதித்தால் நான் மதிப்பேன் இல்லை என்றால் மதிக்க முடியாது என மூஞ்சில் அடித்தது போல் கூறுகிறார். இதைதொடர்ந்து பேசும் மும்தாஜ், நீங்க என்னுடைய டீம்மில் இருந்தால் என் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும். இல்லையென்றால் டீம்மை விட்டு வெளியே போ என கூறுகிறார். இதற்கு மஹத் மறு வார்த்தை பேசாமல் அந்த இடத்தில் இருந்து நகர்வது காட்டப்படுகிறது. 

ஏன் இந்த பிரச்சனை வருகிறது, என்ன டாஸ்க் கொடுத்தார் மஹத் என பொறுத்திருந்து பார்ப்போம்.