Mahaan : மகான் படத்தின் மூலம் துருவ் விக்ரம் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து மிகுந்த ஆவலில்  ரசிகர்கள் உள்ளனர். 

பீட்சா படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் படத்திலேயே நல்ல வெற்றியை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா அவார்ட் வெற்றியை குவித்தது. ஆனால் இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான இறைவி, மெர்குரி உள்ளிட்ட படங்கள் இறங்கு முகத்தையே தந்திருந்த. பின்னர் 2019-ல் ரஜினியின் பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்த கார்த்திக் சுப்புராஜ் 5 குறும்படங்களை கொண்ட புத்தம் புது காலை, தனுஷின் ஜகமே தந்திரம், 9 குறும்படங்களை கொண்ட நவரசா உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் தோல்வியையே சந்தித்திருந்தன. இதையடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை கொண்டு மகான் என்னும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆதித்ய வர்மா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு தனது இரண்டாவது படமாக தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகானின் துருவ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்த நிலையில் இப்போது டப்பிங் பணிகளையும் விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரும் முடித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார். துருவின் குரலில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல் குறித்து ஆவல் மிகுந்துள்ளது.