தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'மெர்சல்' இந்த படத்தில் விஜய், கிராமத்து இளைஞகன், மருத்துவர், மேஜிக்மேன் என மூன்று கெட்டப்புகளில் நடித்து கலக்கி இருப்பர். 

குறிப்பாக மேஜிக்மேன், வேடத்தில் நடிக்க தலை சிறந்த மேஜிக் மேன்கள் இவருக்கு பயிற்சி கொடுத்தனர். அவர்களில் ஒருவர், ராமன் ஷர்மா, இவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை இதுவரை கொடுக்காததால், தற்போது இவர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'தேனாண்டாள் பிலிம்ஸ்' மீது வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்.

தனக்கு தயாரிப்பாளர் கொடுக்க வேண்டிய,  ரூ.4 லட்சம் சம்பள பாக்கியை இவர் பல முறை வீடியோ வெளியிட்டும், நேரடியாக தயாரிப்பாளரிடம் கேட்டும் கூட அவர்களிடம் இருந்து உரிய பதில், மட்டும் பணம் வராததால் ராமன் ஷர்மா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக  ராமன் ஷர்மா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் தான், சென்னை வந்த போது 'பிகில்' ஷூட்டிங்கில்,  நடிகர் விஜய், இயக்குனர் அட்லி ஆகியோர்களை சந்தித்ததாகவும், ஆனால் தனது சம்பள பாக்கி குறித்து அவர்களிடம் அவர் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மெர்சல்' படத்தில் பணிபுரிந்த ஒருசில கலைஞர்களை தான் சந்தித்தபோது அவர்களுக்கும் சம்பள பாக்கி இருந்ததை தான் அறிந்து கொண்டதாகவும் ராமன்ஷர்மா தெரிவித்துள்ளார். அதே போல் தான் கஷ்டப்பட்டு பணிபுரிந்ததற்கான சம்பளத்தை பெறாமல் விடப்போவதில்லை என்றும் கோவமாக அவர் கூறியுள்ளார்.