தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு ஒரு வாரத்திற்கு பின் முதல் ஆளாய் வெளியேறினார். 

ஆனால் மதுமிதாவிற்கு எதிராக தான் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்து இருந்தனர். இருந்தாலும் மக்கள் ஆதரவு பெற்று மதுமிதா சேப் ஆனாங்க..இந்த நிலையில், வேறு ஒரு பிரச்சனையில் அபிராமி வெங்கடாச்சலம் ஏதோ மனதளவில் பாதிக்கப்பட்டு அழ தொடங்குகிறார். 

உடனடியாக இவரை சமாதானம் படுத்த மதுமிதா முயற்சி செய்கிறார். அப்போது.."அழாதே அபி.. பழச எதுவும்  நீ பேசாதே.. முதல்ல நீ அழறத நிறுத்து.. உன்னை பற்றி உனக்கே தெரில.. நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? உன் உயரம் என்ன..? உன் கலரு என்ன..? உன்ன மாதிரி தமிழ் பேசுற தமிழ் பொண்ணு தமிழ்நாட்டிலே ஹீரோயினா இல்ல தெரியுமா..? நீ எல்லாம் அழவே கூடாது என ஊக்கப்படுத்தி பேசி இருந்தார்.

ஏற்கனவே, அபிராமி.. "தனக்கும் முகனுக்கும் பிறந்த குழந்தை தான் வாட்டர் பாட்டில் " என  சொல்லி, எப்போதும் கையில் வாட்டர் பாட்டிலை வைத்து விளையாடி வந்தார். அப்போது மதுமிதா, அபிராமியின் இந்த செயலை எதிர்த்து, நீ ஏன் இப்படி பண்ற.. இந்த நிகழ்ச்சியை என் வீட்டில் எல்லோரும் பார்ப்பாங்க.. நம்ம எல்லோரையும் எல்லோருமே பார்ப்பாங்க..நான் ஒரு தமிழ் பொண்ணு என சம்மந்தமே இல்லாம சொல்லி அனைவரையும் டென்ஷன் படுத்தி விட்டார்.

தமிழ் பொண்ணு என்ற  சொல் அப்போதும் சொன்னார். இந்த நிலையில் மீண்டும் அபிராமியிடம் இப்போதும் "தமிழ் பொண்ணு " என சொல்லி சமாதானப்படுத்தி உள்ளார் மதுமிதா.