நான் உண்மையை மட்டும் தான் பேசுவேன். எத்தனை நாளைக்கு தான் என் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருப்பாங்கன்னு பாக்கலாம் என பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட  நடிகை மதுமிதா பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் டாஸ்க்குக்குப் பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால், இந்தச் செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக் பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

சர்ச்சைக்குரிய வகையில் வெளியேற்றப்பட்ட பின் காசை தரலன்னா தற்கொலை  செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார் மதுமிதா, தற்கொலை மிரட்டலால் கடுப்பான விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா தனக்குச் சேரவேண்டிய சம்பளத்தை தர்றதா சொல்லிட்டாங்க ஆனா ஏன்? சம்பந்தமில்லாம புகார் அளித்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நசரத் பேட்டை போலீசுக்கு தபால் மூலம் புகார் அளித்துள்ள மதுமிதா, அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வலுகட்டாயமாக வெளியேற்றியதாகவும் அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன் கண்டிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில்; இந்த இந்த நொடியே எல்லாத்தையும் சொல்லிடுவேன்.  ஆனால்,எனக்குப் பல வாய்ப்புகளை கொடுத்தவங்கன்னு நன்றியால என் மனசு தடுக்குது.

அவங்க, என் கிட்ட நீங்க எங்கேயும் எதையும் பேசக்கூடாது,மீறினால் அக்ரிமென்டைக் காட்டி கேஸ் போடுவோம்ன்னு மிரட்டுறாங்க. அப்படின்னா, மத்த போட்டியாளர்கள்லாம் வெளில வந்து ஷோல கலந்துகிட்டது பத்திப் பேசறாங்களே, அவங்க மேலயும் வழக்கு போடணுமே... மத்தவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? நான் உண்மையை மட்டும் தான் பேசுவேன். எத்தனை நாளைக்கு தான் என் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருப்பாங்கன்னு பாக்கலாம், ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக விஜய் டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசா கொடுத்திட்டாங்க எனக் கூறியுள்ளார்.