அமேசான் பிரைமில் வெளியாகும் மாதவனின் “மாறா”... டிரெய்லர் வெளியீடு...!
டிரெய்லரின் ஆரம்பத்தில் இருந்தே ஊட்டியின் பசுமையான அழகு நம் கண்களை கவர்ந்து இழுக்கிறது.
அறிமுக இயக்குநரான திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாறா’. இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மாறா திரைப்படம் வெளியாக உள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண் குயின் படங்களை தொடர்ந்து மாதவனின் மாறா திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரின் ஆரம்பத்தில் இருந்தே ஊட்டியின் பசுமையான அழகு நம் கண்களை கவர்ந்து இழுக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத மாறா என்பவரை தேடி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடத்தும் தேடல் படலம் தான் கதை. கண்ணுக்கு தெரியாத கற்பனை காதலனை தேடி காதலி நடத்தும் சுவாரஸ்யமான தேடலின் பயணத்தை அழகாக விளக்குகிறது. தமனின் மனதை மயக்கும் இசையில் மாறா டிரெய்லர் இதோ...