Vijaysethupathi : இன்று மாலை யுவனின் யூட்யூப் சேனலான U1 -ல் மாமனிதன் டீஸர் வெளியாகும் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சீனுராமசாமியுடன் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ள படம் மாமனிதன். ஏற்கனவே சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் தென்மேற்குப்பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.

இவர்கள் குட்டனியில் உருவாகும் புதிய படத்தை யுவன் தயாரித்து வரும் இந்தப் படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலேயே இருக்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாமனிதன் டீஸர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்தது இந்த படத்தின் நாயகன் வெளிடியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சீனுராமசாமி நீண்டநாள் கனவான மாமனிதன் நல்ல வெற்றியை பெற்றுத்தரும் என நம்புவதாகவும், இன்று மாலை யுவனின் யூட்யூப் சேனலான -ல் டீஸர் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…