ஷாருக் கானின் அப்பதிவை பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ததுதான் தாமதம். ‘நீதான் விஜய் படங்களுக்கு மட்டுமே பாட்டு எழுதுற ஆளாச்சே. இதைப் பகிர்ந்துட்டு எங்க தல படத்துல பாட்டு எழுத சான்ஸ் தேடுறியா? என்று கலாய்க்க ஆரம்பித்தனர்.
தொடர்ந்து விஜய் படங்களுக்கு மட்டுமே அதிகப்பாடல்கள் எழுதிவரும் பாடலாசிரியர் விவேக்கை அஜீத் ரசிகர்கள் வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். 'நீங்கள் சண்டைபோடக் கூடாது என தளபதியும் தலயும் நினைக்கிறார்கள். ஆனால் எதற்கெடுத்தாலும் அடித்துக்கொள்கிறீர்கள்’என்று அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அவர்.
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடத்திய ஒரு கேள்வி பதில் பகுதியில் நடிகர்கள் அஜீத்,விஜய் மற்றும் தனுஷ் குறித்த கேள்விகளுக்கு அவர்கள் எனது நண்பர்கள் என்பதுபோல் பதில் அளித்திருந்தார். ஷாருக் கானின் அப்பதிவை பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ததுதான் தாமதம். ‘நீதான் விஜய் படங்களுக்கு மட்டுமே பாட்டு எழுதுற ஆளாச்சே. இதைப் பகிர்ந்துட்டு எங்க தல படத்துல பாட்டு எழுத சான்ஸ் தேடுறியா? என்று கலாய்க்க ஆரம்பித்தனர்.
அஜீத் ரசிகர்கள் போலவே கோபமான விஜய் ரசிகர் ஒருவர், "என்ன அனைத்துக்கும் ஜால்ரா போடுகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாடலாசிரியர் விவேக், "உங்களுக்கும், உங்களை மாதிரி நினைப்பவர்களுக்கும் நான் ஒன்றும் பண்ண முடியாது. கடந்த 10 நாட்களில் 15 முதல் 17 பாடல்கள் எழுதியுள்ளேன். நான் பாடல்கள் எழுதாவிட்டாலும், வேறு எங்காவது பணிபுரிந்து கொண்டிருப்பேன்.ஜால்ரா போட வேண்டிய அவசியமில்லை தலைவா. ஒரு பெரிய கலைஞன், நம்ம ஊர் நடிகர்களைப் பற்றி பேசும்போது பெருமையாக இருக்கிறது. ஷேர் பண்ணினேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், 'தல 60' படத்துக்கு நான் பாடலாசிரியர் இல்லை. யதார்த்தமாகப் பகிர்ந்தேன் என்று விவேக் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் பலரும் விவேக்கை விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாடலாசிரியர் விவேக், " இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இங்கு ஜாஸ்தி.ஆனால், நீங்கள் சண்டைபோடக் கூடாது என தளபதியும் தலயும் நினைக்கிறார்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற 10 பேரையும் காயப்படுத்தாதீர்கள். நீங்கள் என்னைக் காயப்படுத்த முடியாது. ஏனென்றால் என் இதயம் வலுவானது" என்று ட்விட் செய்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Oct 9, 2019, 10:33 AM IST