Asianet News TamilAsianet News Tamil

அட்லீ பண்ண அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா?.... புலம்பும் பிகில் பிரபலம்... அப்படி என்ன தான் பண்ணார் அட்லீ...!

சமீபத்தில் இயக்குநர் அட்லீ பிகில் ஜெர்ஸியை போட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அட்லீயுடன், விஜய் மற்றும் படத்தில் நடித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். 

Lyricist Vivek Ask Bigil Tee Shirt From Atlee
Author
Chennai, First Published Nov 15, 2019, 1:57 PM IST

தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த விஜய்யின் 'பிகில்' திரைப்படம் 4 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் 3வது படமாக வெளிவந்த 'பிகில்' திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விஜய் உடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச், ராயப்பன் ஆகிய 2 கெட்டப்புகளில் விஜய் அசத்தியிருந்தார். தாறுமாறு வெற்றிகளைக் குவித்து வரும் 'பிகில்' திரைப்படம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

Lyricist Vivek Ask Bigil Tee Shirt From Atlee

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அட்லீ வெளியிட்ட புகைப்படம் ஒன்று பிரச்னையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் அட்லீ பிகில் ஜெர்ஸியை போட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அட்லீயுடன், விஜய் மற்றும் படத்தில் நடித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். 

 

இந்த புகைப்படத்தை பார்த்த பாடலாசிரியர் விவேக் அட்லீ மீது செம்ம கோவத்தில் உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக், இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாரும் இல்லையா? எனக்கும் புல்லிங்களுக்கும் டீ-சர்ட் பார்சர் ப்ரோ என அட்லீக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார். 

விஷாலின் 'ஆக்சன்' வெற்றியா ? தோல்வியா ? படம் எப்படி இருக்கு..?வீடியோ..!
 

Follow Us:
Download App:
  • android
  • ios