பகுத்தறிவு பேசும் வைரமுத்து அய்யர் வைத்து மந்திரம் ஓதி.. கல்யாணம் பண்ணும் அழகை பாருங்க ..! 

பகுத்தறிவு பேசும் வைரமுத்து தன்னுடைய திருமணத்தை ஐய்யர் வைத்து நடத்திய திருமண புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அனைவராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து திராவிட கொள்கையைக் கொண்டவர். திமுகவிற்கு ஆதரவாக பேசக்கூடியவர்; கலைஞர் குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்; எங்கு சென்றாலும் நாத்திகம் பற்றி பேசுபவர்; கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிப்பவர்; சமீபத்தில்கூட ஆண்டாள் பற்றி பேசி பெரும் சர்ச்சைக்கு ஆளானவர். பின்னர், இந்து மதத்தின் மீது எனக்கு எந்த ஒரு வெறுப்புணர்வும் கிடையாது ஆனால் வரலாற்று உண்மையைத் தான் நான் பேசினேன் என ம தனது கருத்தை மீண்டும் பதிவு செய்து இருந்தார். இது இந்து மக்களிடையே ஒருவிதமான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படி பல்வேறு நிகழ்வில் பல காலகட்டங்களில் நாத்திகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுபவர் என அனைவராலும் அறியப்பட்டவர் வைரமுத்து.நாத்திகம் பேசுபவர்கள் பொதுவாக சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணம் செய்து கொள்வது வழக்கம். அதாவது அய்யர் வைத்து மந்திரம் ஓதாமல் திருக்குறளை வாசித்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் வைரமுத்து இன்று நாத்திகத்தை அதிகமாக பேசி வந்தாலும் அவருடைய திருமணத்தின் போது அய்யர்மந்திரம் ஓதி, சீரும் சிறப்புமாக நடைபெற்று உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டோவை பார்க்கும் சமூக வலைத்தள வாசிகள் வைரமுத்துவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் எதிர் குரலை எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.