Asianet News TamilAsianet News Tamil

தேசிய விருதுக்கு எதிரா கோஷம் போட்டா டயமண்டு வைரமுத்துவுக்கு ஏன் வலிக்குது தெரியுதுங்களா?

’தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காததில் எந்த வித அரசியல் உள்நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் தமிழ்க் கலைஞர்கள் வருத்தப்படக்கூடாது. மத்திய அரசைக் கண்டிக்கவும் கூடாது’என்று இதுவரை ஏழு முறை தேசிய விருதைத் தட்டிப் பறித்த கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
 

lyricist vairamuthu tells not to blame national award committee
Author
Chennai, First Published Aug 19, 2019, 12:36 PM IST

’தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காததில் எந்த வித அரசியல் உள்நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் தமிழ்க் கலைஞர்கள் வருத்தப்படக்கூடாது. மத்திய அரசைக் கண்டிக்கவும் கூடாது’என்று இதுவரை ஏழு முறை தேசிய விருதைத் தட்டிப் பறித்த கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.lyricist vairamuthu tells not to blame national award committee

இந்திய சினிமாக் கவிஞர்கள் வரலாற்றில், மீட்டருக்கு மேல் பேர் சம்பாதிப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் விருதுகளை ஆள் வைத்துத் தட்டித்தூக்குவதிலும் வைரமுத்துவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அவர் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகி சுமார் 40 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் நிலையில், 7 தேசிய விருதுகளையும் சேர்த்து இதுவரை குறைந்த பட்சம் 400 விருதுகளையாவது வாங்கியிருப்பார். அப்படிப்பட்ட லாபி மன்னன் அவர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்ப்படங்கள் தேசிய விருதுகள் எதுவும் பெறாத நிலையில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் பலரும் மோடி அரசின் பாரபட்சத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களில் வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான இயக்குநர் பாரதிராஜாவும் அடக்கம். இன்னொரு பக்கம், விருதுகளுக்கெல்லாம் அலையாத தன்மானக் கவிஞர் யுகபாரதி, ‘மோடி ஆட்சியிலிருக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்ப் படங்களுக்கு ஒரு விருதுகூடக் கிடைக்காது’என்று அடித்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.lyricist vairamuthu tells not to blame national award committee

இப்படி மத்திய அரசை ஆளாளுக்குக் கிழித்துத் தொங்கவிட்டால் எதிர்காலத்தில் இன்னும் ஏழெட்டு தேசிய விருதுகள் வாங்கும் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டுவிடுவார்களே என்று அஞ்சிய வைரம் நேற்று தமிழ்க் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதுவும் எங்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜால்ரா அடிக்க வந்த இடத்தில்.சென்னை தேனாம்பேட்டையில் அப்பலோ மருத்துவமனை சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழ் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாததில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை. தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம். தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் பேசும் விருது கிடைத்துள்ளது. ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்கள் பேசிய விருது தான் பெரியது’என்கிறார். அப்ப இனிமே மக்கள் பேசிய விருது தவிர வேற எதுக்கும் அலைய மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்கொடுங்க கவிஞரே, உங்களை நம்புறோம்.

Follow Us:
Download App:
  • android
  • ios