தமிழ்சினிமாவில் அதிக பட்ஜெட்டில் நடைபெறும் முக்கிய படங்கள் அனைத்தையுமே தயாரித்து வரும் லைகா நிறுவனம் தங்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் நீண்ட நாட்களாகவே தங்களுக்கு ஒழுங்கான பதிலைக் கூட சொலவ்தில்லையென்றும் ட்விட்டர் பக்கத்தில் ரேக்ஸ் என்னும் அமைப்பு புகார் சொல்லியுள்ளது.

கடந்த தீபாவளிக்கு ரிலீஸான ஷங்கரின் ‘2.0’வைத் தயாரித்த லைகா நிறுவனம் ஏற்கனவே சில விளம்பர நிறுவனங்களுக்கு சம்பளபாக்கி வைத்திருப்பதாக சர்ச்சைகள் கிளம்பியது. அந்த சர்ச்சை சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரேக்ஸ் என்னும் பன்மொழி டப்பிங் செய்து தரும் நிறுவனம்,...உங்களை நம்பி இரு மொழிகளுக்கும் டப்பிங் முடித்து மொத்தமாக ஒப்படைத்துவிட்டோம். ஆனால் எங்கள் ஊழியர்களின் சம்பள பாக்கிக்காக போன் அடித்தாலோ மெயில் அனுப்பினாலோ ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருக்கிறீர்கள்.

உங்கள் நிறுவனத்தின் மீது வைத்திருந்த கடைசி நம்பிக்கையையும் இழந்ததாலேயே இப்பதிவினிவினை இப்படி ட்விட்டரில் வெளியிடும் முடிவுக்கே வந்தோம்’என்று பதிவிட்டிருக்கிறார்கள்.அந்த பதிவுக்குக் கீழே சில விளம்பர நிறுவனங்களும் தங்களுக்காக சம்பள பாக்கி ஒரு வருடமாகியும் வரவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் ரஜினி,கமல் என்று இரு மெகா ஸ்டார்களை வைத்துப் படம் எடுக்கும் நிறுவனத்தின் லட்சணம் இதுதானா?