ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிற படங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மூச்சு முட்டுவதால் தனது நிறுவனம் தயாரிப்பதாக இருந்த ‘சிவகார்த்திகேயன் 17’படத்தை லைகா நிறுவனம் கைவிடப்போவதாக கோடம்பாக்கத்தில் சூடான செய்திகள் நடமாடுகின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ’sk 17’  படத்தில் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருந்த  இந்த படத்தின் அறிவிப்பு வந்ததோடு சரி, ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்லப்பட்ட இப்படம் குறித்த மற்ற அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.இந்தநிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 

இது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, லைக்கா நிறுவனம் 2.0, இந்தியன் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துதொடர்ந்து அடிவாங்கியதால்  இனிமேல் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.அதனால் விக்னேஷ் சிவனிடம் இந்த படத்தின் பட்ஜெட் குறைத்துக்கொள்ளும் படி கூறினார்களாம். ஆனால் அவர் விடாப்பிடியாக பட்ஜெட்டை குறைக்க முடியாது என்ற சொன்னதால் லைக்கா இந்த படத்தை தயாரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இப்படம் கைவிடப்பட்டது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் தனது நாயகி நயன்தாராவை ஹீரோயினாக வைத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.