lyca production file the case for politician

லைகா நிறுவனத்தின் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டு பின்னர் தமிழக அரசியல்வாதிகள் சிலரின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்துவிட்டதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து மற்றும் லைகா நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒருசில அரசியல்வாதிகள் கருத்து கூறி வந்தனர்.

இது குறித்து தங்கள் மீது அவதூறு கூறியதாகவும், ரஜினி தங்களுடைய விழாவில் கலந்துகொள்ளாததற்கு காரணம் “தமிழர் வாழ்வுரிமை கட்சியின்” தலைவர் வேல்முருகனும் ஒருவர் என்று கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் லைக்கா நிறுவனத்தினர்.

இது குறித்து பலர் தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் கூறி வருகின்றனர். அதில் பலர் “வேல்முருகனுக்கு” ஆதரவு குரல் கொடுக்கும் விதத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம்... தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அவர்கள் மனதில் பட்ட அனைத்தையும் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என்றும்.

நீங்கள் (லைக்கா நிறுவனம்) ரஜினிக்கு தான் காசு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறீர்கள், ஆகவே அரசியல் வாதிகளிடம் பேசுவதற்கு பதில் ரஜினிகாந்திடம் போய்பேசுங்கள்.

அரசியல் தலைவர்கள் பேசினால், ஏன் ரஜினி ரத்து செய்தார். என அவரிடம் கேட்டு அவர் மீது வழக்கு தொடருங்கள் என்பது போல ஒரு சில கருத்துகள் உலவருவதாக கூறப்படுகிறது.

வருவதாக கூறி ஏமாற்றியதாக லைக்கா நிறுவனம் ரஜினி மீது வழக்கு தொடருமா... எதிர்பார்க்காத சில விஷயங்கள் கூட அரங்கேறி கொண்டுதானே இருக்கிறது பொறுத்திருந்து பாப்போம்...