‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனத்திடமிருந்து லவட்டி வேறு சில நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முயன்ற ஷங்கருக்கு அந்நிறுவனம் போட்ட கண்டிசனால் ஜெர்க் ஆகிப்போனவர் மீண்டும் யு டர்ன் அடித்து அதே நிறுவனத்தில் படத்தைத் தொடர சம்மதித்துவிட்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமலுக்கு அரசியலில் ‘இந்து’தான் ஹாட் டாபிக் என்றால் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக ‘இந்தியன் 2’தான் அதைவிட ஹாட் டாபிக். அப்படத்தை தொங்கலில் விட்டு விட்டு கமல் அரசியல் எண்ட்ரியில் அதகளம் பண்ணிக்கொண்டிருக்க, தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார் ஷங்கர்.

இதுவரை தன் மனம்போன போக்கில் இஷடத்துக்குப் படம் பண்ணிக்கொண்டிருந்த ஷங்கரிடம் லைகா நிறுவனம் படுகெடுபிடியாக பட்ஜெட் கேக்கவே வெலவெலத்துப்போனார். தன் படத்துக்கு பட்ஜெட் போடுவதெல்லாம் அலர்ஜி என்று முடிவெடுத்த அவர் சில தினங்களாக படத்தை அடுத்த நிறுவனங்களுக்கு நகர்த்திக்கொண்டு போக முயல், அது ஏறத்தாழ வெற்றிக்கோட்டைத் தொடப்போன நேரத்தில் லைகா நிறுவனம் ஷங்கருக்கும் கமலுக்கும் சரியான முட்டுக்கட்டை ஒன்றைப் போட்டது.

‘இந்தியன் 2’ வை வேறு நிறுவனத்துக்குக் கொண்டுபோவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படிப்போகும் பட்சத்தில் கமல் எங்களது தயாரிப்பான ‘சபாஷ் நாயுடு’வுக்கு வாங்கிய அட்வான்ஸ் 25 கோடி ரூபாய், ‘இ 2’ படத்துக்கு இதுவரை செலவழிக்கப்பட்டுள்ள 65 கோடி ஆக மொத்தம் 90 கோடியை எங்களுக்கு செட்டில் பண்ணினால் ஒழிய வேறு யாரும் இப்படத்தைத் தயாரிக்கவிடமாட்டோம்’ என்று கறாராகக் கூறவே ஷங்கர் வெலவெலத்துப்போய்விட்டாராம். இந்த செட்டில்மெண்டுக்கு ரிலையன்ஸின் அம்பானியோ சன் பிக்சர்ஸோ ஒத்துவரமாட்டார்கள் என்று உறைக்கவே ‘வாங்க பாஸ் பேசித்தீர்த்துக்கலாம்’ என்று தரைமட்டத்துக்கு இறங்கிவந்துவிட்டாராம் ஷங்கர்.