‘பிக்பாஸ் சீஸன் 3’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் லாஸ்லியா தமிழ் சினிமாவில் யாருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பது குறித்து தினமும் ஒரு தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர் சேரன் இயக்கத்தில் சேரனுக்கே ஜோடியாக நடிக்கவிருக்கும் தகவல் ஒன்றும் சற்று தயக்கத்துடன் நடமாடி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில குழப்பங்களுக்குப் பிறகு எல்லோர் மனதையும் கவர்ந்த ஒரே டார்லிங் டார்லிங் டார்லிங் மாறியிருப்பவர் இலங்கை வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான லாஸ்லியா மட்டுமே. அவரது ஆர்மிகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறார்கள். அவரது இளம் வயது புகைப்படங்களை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுப்பதையே ஒரு குரூப் முழுநேர வேலையாக செய்து வருகிறது.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வருவதாகவும் நடிகர் அதர்வா தொடங்கி ஆர்யா வரை அவருடன் இணைந்து நடிக்க பலர் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. ஆனால் இவர்கள் ஆசையில் ஒரு பிடி மண் அள்ளிப்போட்டு முடித்துவிட்ட இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடன் தன்னுடன் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டதாகவே தெரிகிறது. ‘மகளே மகளே’என்று அழைத்து சபலத்துடன் லாஸ்லியாவின்  கன்னத்தை சேரன் தடவுகிறார் என்று மிக வெளிப்படையாகவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சேரனின் அம்முடிவைக் கேள்விப்பட்டு கமலே கதிகலங்கிப்போயிருக்கிறாராம்.