பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும், தினமும் ஏதேனும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வாகையில் கடந்த மூன்று நாட்களாக, மொம்மலாட்டம், கூத்து, வில்லு பாட்டு போன்ற கலாசார டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. அதனை ஹவுஸ் மேட்சும் அற்புதமாக செய்து காட்டி அசத்தினர்.

அதை தொடர்ந்து இன்று, இவர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கு பற்றி படித்து காட்டுகிறார் லாஸ்லியா. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள டாஸ்குகளை ஒவ்வொருவரும் சரியாக செய்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான். 

அடிக்கடி தூங்குவது, மைக்கை சரியாக மாட்டாமல் இருப்பது என சில சின்ன சின்ன தவறுகளை செய்கிறார்கள். குறிப்பாக கவின் மற்றும் லாஸ்லியா இருவரும், அவர்களுடைய காதல் பிரச்சனை பற்றி பேசுவதற்காக மைக்கின் பேட்டரியை, கழட்டி வைத்து விட்டு பேசியதற்காக, கமல் கடந்த வாரம் இவர்கள் இருவரையும் எச்சரித்தார்.

இந்நிலையில் இந்த டாஸ்க் பற்றி லாஸ்லியா படித்து முடித்த பின்பு, கவின் உட்பட அனைவரையும் மைக்கை சரியாக போடுங்கள். இந்த வீட்டில் சரியாக இருப்பது நான் தான்....  ஒரு முறை கூட பிக்பாஸ் மைக்கை சரி செய்யுங்கள் என தன்னிடம் பிக்பாஸ் கூறியதே இல்லை என தற்பெருமை பேசுகிறார்.

இவர் பேசிய அந்த நொடியே திடீர் என பிக்பாஸ் உங்களுடைய மைக்கை சரி செய்யுங்கள் லாஸ்லியா என கூறுகிறார். இதை கேட்டதும் லாஸ்லியா அசிங்கப்பட்டு போகிறார். மேலும் சாண்டி மற்றும் தர்ஷன் இவரை வெறுப்பேற்றி செம்மையாக கலாய்த்து விட்டனர்.