இலங்கை செய்திவாசிப்பாளராக, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார்.

மேலும் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் நடத்திஅதன் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதே போல் பல்வேறு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு செம்ம பிஸியாக வலம் வருகிறார் லாஸ்லியா.

ஹர்பஜன் சிங்குடன் ஒரு படம், மற்றும் நடிகர் ஆரியுடன் ஒரு படம் இவரின் கை வசம் உள்ளது. ஆனால் லாஸ்லியா ஆர்மியை சேர்ந்தவர்கள், எப்போது கவினுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் லாஸ்லியா கவின் பற்றிய கேள்வியை எழுப்பினால் அவர் யார் என்று கேட்காத குறையாய் பதில் சொல்லி எஸ்கேப் ஆகிறார்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது லாஸ்லியா, மெரூன் கலர் உடையில்... நகைகள் அணிந்தபடி உள்ள, அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.