பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், அமைதியாக இருந்து, அனைத்து ரசிகர்கள் மனதையும் கவரும் போட்டியாளராக இருப்பவர் லாஸ்லியா. குறிப்பாக இவர் பேசும் இலங்கை தமிழின் அழகிற்காகவே முதல் நாளே, இவருக்கு சிலர் ஆர்மி துவங்கி விட்டனர். 

அனால் இந்த விஷயம் அவருக்கு தெரியாது. இருப்பினும் சற்றும் கள்ளம் படம் இல்லாமலும், ரசிகர்களை கவர வேண்டும் என்கிற எந்த நோக்கமும் இல்லாமல், மிகவும் சாதாரணமாக விளையாடி வருகிறார்.

இதுவரை இவர், செய்தி வாசிப்பாளராக இருக்கும் பல அழகிய புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது இவர் பள்ளி நாட்களில் எப்படி இருந்தார் என்பது பற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

பள்ளி நாட்களிலேயே, மேடை ஏறி வீரமாக பேசும் ஒரு பேச்சாளர் என்பது இதில் இருந்து தெரிகிறது.