பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளரான லாஸ்லியா போன வருடமே பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனை செய்தாராம்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தன் சக தோழிகளிடம் அடிக்கடி சொல்வது.."ஏதோ பிறந்தோம்...அப்படியே இருந்தோம்" என இருக்காமல், எதையாவது சாதிக்க வேண்டும் என்றும் மிக முக்கியமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதே தன்னுடைய பெரிய குறிக்கோள் என தொடர்ந்து சொல்லி வருவாராம்.

அப்போதுதான் சென்ற வருடம் நடந்த பிக் பாஸ் சீசன் 2 பற்றி, அவர் வேலை செய்து வந்த அலுவலகத்திலேயே அடிக்கடி பேசி வருவாராம். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பற்றியும் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் சக நண்பர்களிடம் பேசி கிண்டலடித்து வருவாராம்.

அப்போதே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்து இருக்கு. அதனுடைய எதிரொலியாகத்தான் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 3 நஸ்ரியா கலந்து கொண்டு உள்ளார்.அவர் அப்போதிலிருந்தே முயற்சி மேற்கொண்டு வந்ததால் அவருடைய நெருங்கிய நண்பர் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தான் பிக்பாஸ் வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்..? எது போன்ற பிரச்சனை வரலாம்..?யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிக தெளிவாக அப்போதே தெரிந்துகொண்ட லாஸ்லியாவிற்கு, இப்போது பிக்பாஸ் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.