இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது அது அனைவரும் அறிந்ததுதான். அந்த வகையில் நேற்றைய தினம், இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவின் அம்மா தங்கைகள் மற்றும் அப்பா ஆகியோர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வீட்டிற்குள் வந்தனர். 

முதலாவதாக லாஸ்லியாவின் அம்மா மற்றும் அவருடைய தங்கைகள் இருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் வருவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்காத லாஸ்லியா,  அனைவரையும் கண்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்,  அழுதவாறே லாஸ்யா அவர்களை வரவேற்றார். கட்டியணைத்து இத்தனை நாள் பார்க்காத ஏக்கத்தை, பாச மழை பொழிந்தனர். 

பின் லாஸ்லியாவிடம், அவருடைய அம்மா நீ நீயாக இரு. மற்றவர்கள் அனைவரும் அவர்களுடைய விளையாட்டை நன்றாக விளையாடி வருகிறார்கள். நீ எப்படி மாறினாய் என கேள்வி கேட்டார். நீ செய்யும் ஒரு விஷயத்தை தவிர, மற்றது எல்லாம் சரி. அதை விட்டுவிடு, எப்படி நீ அம்மாவையும், தங்கையையும் மறந்தாய் என அழுது கொண்டே கேட்கிறார். 

இதற்கு லாஸ்லியா, இங்கு இப்படி தான் இருக்க முடியும் என்பது போல் ஏதோ கூற, நீ அம்மாவின் மகளாகவே... தனியாக நின்று விளையாடு. உன்னால் தான் நாங்கள் சந்தோஷமாக இருதோம். இப்போது உன்னால் எப்படி மாற முடிந்தது என அறிவுரை கூறுகிறார். லாஸ்லியாவின் தங்கைகளும், எங்களை விடு, அம்மா- அப்பாவை பாரு, இப்போது அப்பாவிற்கு கூட உடல் நிலை சரியில்லை என கூறுகிறார்.  

மேலும் லாஸ்லியாவின் அம்மா, உனக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதை எடுத்துக் கூறும் விதமாக சூசகமாக சில வார்த்தைகள் பேசுகிறார். அம்மா சொல்லும் வார்த்தைகளை கேட்டு, என்னசொல்வது என தெரியாமல் லாஸ்லியா குழப்பத்தில் சிரிக்கிறார்.